பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் யுவதியொருவர் உயிரிழப்பு !

 மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த பெண் வீட்டிற்கு அருகில் உள்ள காணி ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு உயிரிழந்தவர் இல்லுகன்னியா வடக்கு பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இதன்போது உயிரிழந்த பெண்ணிற்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் தலையில் பலத்த காயங்கள் உள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.


எனவே, பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
No comments:

Post a Comment