ரிஷாட் எம்.பி வீட்டில் வைத்து ஆறு சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்! - ஆளும் தரப்பு குற்றச்சாட்டு

 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வைத்து 6 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.


சிறுமிகளில் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


அப்போது எதிர்க்கட்சியில் இருந்த எந்த ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரும் இது தொடர்பாக குரல் எழுப்பவில்லை என்றும், தற்போது போலியாக பெண் விடுதலைக்காக பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments:

Post a Comment