பாகிஸ்தானில் பணிபுரிந்து வந்த நிலையில் இலங்கையரொருவர் இன்று பகல் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்(Imran Khan) தனது கடுமையான அதிருப்தியினை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் ஒரு நாடாக பாகிஸ்தான் வெட்கப்படுவதாக இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் - சீல்கோட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் சக ஊழியர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், பின்னர் சடலம் எரியூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் கடுமையான கண்டனங்களை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க தயங்க மாட்டோம் என்றும் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
0 Comments