யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு

 யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு  ஒன்று இன்றைய தினம் வெடித்துச் சிதறியள்ளது.  


நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார்.


இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற வர்த்தக நிலையத்தினர் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையினால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன.


இந்த நிலையிலேயே நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

0 Comments

Copyrights © Today Yarl News - Today Yarl News |Tamil News Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News