களுத்துறை, கொஹொலான ஹெட்டிகொட பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது மாமனாரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கும் அவரது மாமனாருக்கும் இடையில் பல நாட்களாக இருந்த தகராறு நேற்று கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது குறித்த நபர் அவரது மாமனாரை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments