பெண்ணின் கால்களை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் !

அடையாளம் தெரியாத நபர்களால் பெண்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காணொளிகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், சம்பவம் தொடர்பில் காணொளிகளை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை பொலிஸார் தேடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கடந்த 19ம் திகதி டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் என்ற பகுதியில் நள்ளிரவில் காரில் இருந்து இறங்கிய பெண்களில் ஒருவரை சூழ்ந்துக்கொண்டு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர்.


இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மர்மநபர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி பொலிஸார், ஷாலிமார் பாக் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராக்களின் காட்சிகளின் அடிப்படையில் பெண் மீது தாக்குதல் நடத்திய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment