சத்யராஜின் வீட்டில் திடீர் மரணம் ! அதிர்ச்சியில் திரையுலகம் !

 பிரபல நடிகரான சத்யராஜின் தங்கை கல்பனா மன்றாடியார் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 66 வயதான கல்பனா இறந்த செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.


சத்யராஜுக்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். கல்பனாவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது
No comments:

Post a Comment