யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு (PHOTOS)

 யாழ். வலிகாமம் கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (வயது 51) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த நபர் சாவகச்சேரி - தனங்கிளப்பு, அறுகுவெளியில் வீடு ஒன்றிலிருந்து வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


இந்த நிலையில் வீட்டில் நடமாட்டமில்லாததை அவதானித்த அயல்வீட்டுக்காரர் வீட்டை எட்டிப் பார்த்த போது துர்நாற்றம் வீசியுள்ளது.


இது குறித்து உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அவர் தகவல் வழங்கியுள்ளார்.


இதனடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 




Post a Comment

0 Comments

Copyrights © Today Yarl News - Today Yarl News |Tamil News Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News